மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
மலையாளத்தில் மோகன்லால் நடித்த தாண்டவம், பிரித்விராஜ் நடித்த ‛சக்ரம்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ஜானி சக்காரியா. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திலீப், நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற, பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட ‛பாடிகார்ட்' படத்தை தயாரித்தவரும் இவர்தான். தற்போது பைனான்சியர் ஒருவரிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்த வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையை சேர்ந்த துவாரக் என்பவரிடம் பட தயாரிப்புக்காக இரண்டரை கோடி ரூபாய் வாங்கி இருந்த ஜானி சக்காரியா, அதில் வெறும் 30 லட்சம் மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு லுக் அவுட் நோட்டீசும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து துபாய் செல்வதற்காக கொச்சின் விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.