அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி |

திமுக நிர்வாகியும் பேச்சாளருமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பலமுறை சர்ச்சை கருத்துகளால் சிக்கலில் மாட்டிக்கொள்பவர். நடிகை குஷ்பு குறித்த சர்ச்சை பேச்சுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். லோக்சபா தேர்தலின்போது பிரசார மேடையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகையும், பா.ஜ., வேட்பாளருமான ராதிகா சரத்குமார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ தற்போது வைரலான நிலையில் சமூக வலைதளத்தில் ராதிகா தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.