வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா |

தில் ராஜூ தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில் விஜய்தேவரகொண்டா, கீர்த்திசுரேஷ் நடிக்கும் படத்துக்கு 'ரெளடி ஜனார்தனா' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு டிசம்பரில் படம் ரிலீஸ் ஆகிறது. ஐதராபாத்தில் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்வில் இந்த தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1980களில் கிழக்கு கோதாவரியை களமாகக் கொண்ட ஆக் ஷன் படமாக இந்த கதை உருவாகிறது. இதில் ரவுடி ஜனார்தனா என்ற வேடத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக வீடியோவில் ரத்தம் தெறிக்க தெறிக்க பலரை வெட்டி சாயக்கிறார் விஜய் தேவரகொண்டா. அதோடு அந்த வீடியோவில் ஒரு காட்சியில் கெட்ட வார்த்தையும் பேசி உள்ளார். எப்படி இதை அனுமதித்தார்கள் என தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக விஜய் தேவரகொண்டாவுக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அவர் நடித்த லைகர், குஷி, கிங்டம் ஆகிய படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வருகின்றன. அதேபோல் கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா படங்களும் தோல்வி அடைந்துள்ளன. ஆகவே இரண்டு பேரும் இந்த படத்தை எதிர்பார்ப்புடன் நோக்கி இருக்கிறார்கள்.
காதல் படங்களில் நடித்து வந்த விஜய் தேவரகொண்டா ஆக் ஷனுக்கும் மாறினார். அது அவருக்கு செட் ஆகவில்லை என பேச்சு வந்தது. ஆனாலும், இந்த படத்திலும் அவர் ஆக் ஷன் ஹீரோவாகவே நடிக்கிறார்.