‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 67வது படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டது. அதில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதில் நடிப்பதில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை. அதேசமயம் நடன இயக்குனர் சாண்டியை இந்த படத்தில் ஒரு நடிகராக மாற்றியுள்ளார் லோகேஷ் கனகராஜ். மேலும் மலையாள திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான மேத்யூ தாமஸ் என்பவரை இந்த படத்திற்காக அழைத்து வந்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இந்த மேத்யூ தாமஸ் கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் ஹிட்டான கும்பலாங்கி நைட்ஸ் என்கிற படத்தில் நான்கு சகோதரர்களில் இளையவராக நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர். அதைத் தொடர்ந்து வெளியான தண்ணீர் மாத்தன் தினங்கள் என்கிற படத்தில் வினீத் சீனிவாசனுக்கு இணையான பாத்திரத்தில் இளம் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது
தொடர்ந்து மலையாளத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் மேத்யூ தாமஸ். அதுமட்டுமல்ல தற்போது நடிகை மாளவிகா மோகனனும் இவரும் ஜோடியாக மலையாளத்தில் கிறிஸ்டி என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளார். இதற்கு முன்னதாக லோகேஷின் டைரக்சனில் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனின் நடித்திருந்தார் என்பதால், இந்த படத்தில் மேத்யூ தாமஸ் நடிப்பதற்கு மாளவிகா மோகனன் சிபாரிசு செய்திருப்பாரோ என சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் தங்களது யூகத்தை வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால் லோகேஷ் கனகராஜை பொறுத்தவரை தனது படங்களில் மலையாள நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்தி வருபவர் என்பதால் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார் என்பதால் மேத்யூ தாமஸை அவர் தேர்வு செய்திருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.