சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் | ‛பப்லு' பிரித்விராஜை பிரிந்துவிட்டாரா ஷீத்தல்? |
மலையாள திரையுலகில் இப்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் நடிகர் மோகன்லால். வருடத்திற்கு குறைந்தபட்சம் 4 முதல் 6 படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2019ல் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் முதன்முறையாக மலையாள திரையுலகில் 200 கோடி வசூலித்த திரைப்படம் என்கிற பெருமையையும் பெற்றது. ஆனால் அதைத்தொடர்ந்து இப்போது வரை தியேட்டரில் வெளியான மோகன்லாலின் ஆறு படங்கள் வரிசையாக தோல்வியை தழுவியுள்ளன.
அதே சமயம் இந்த மூன்று வருடங்களில் ஓடிடியில் வெளியான ப்ரோ டாடி, திரிஷ்யம்-2 மற்றும் டுவல்த் மேன் ஆகிய மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தியேட்டரில் வெளியான ஆராட்டு மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியை தழுவின. சமீபத்தில் மோகன்லால் தனி ஒருவராக நடித்திருந்த ஆலோன் திரைப்படமும் தியேட்டர்களில் வெளியாகி தோல்வியையே சந்தித்துள்ளது.
இதனால் மோகன்லால் படங்கள் தியேட்டரில் வெளியானால் தோல்வி, ஒடிடியில் வெளியானால் ஹிட் என்பது போன்று ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. இதை தொடர்ந்து ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் அவர் நடித்துள்ள ராம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு தயாராகி வருகிறது. இந்த படம் இப்போது ஏற்பட்டுள்ள இந்த புதிய மாயையை உடைத்து மீண்டும் தியேட்டர்களில் மோகன்லால் வெற்றிக்கொடி கட்ட உதவும் என எதிர்பார்க்கலாம்.