தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! |

வித்தியாசமான படங்களுக்கு பெயர் போன பிரபல மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படம் கடந்த ஜனவரி 19ஆம் தேதி மலையாளத்தில் வெளியானது. அப்போதே தமிழிலும் வெளியாக வேண்டிய இந்த படத்தின் ரிலீஸ் தேதி சில காரணங்களால் தாமதமானது. மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் என்று சொல்லப்படாவிட்டாலும் மம்முட்டியின் நடிப்பிற்கும் வித்தியாசமான கோணத்தில் கதையை யோசித்த இயக்குனருக்கும் என ரசிகர்களிடம் இந்த படம் பாராட்டு பெற்று வருகிறது.
ஒரு எளிய கிராமத்து மனிதராக மிகச்சிறந்த நடிப்பை மம்முட்டி வழங்கியிருந்தார். இந்த படம் வெளியாகி சரியாக 20 நாட்கள் இடைவெளிக்குள் அதாவது வரும் பிப்ரவரி 9ஆம் தேதி மம்முட்டி நடித்துள்ள ஆக்சன் படமான கிறிஸ்டோபர் ரிலீஸ் ஆக இருக்கிறது என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனரும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் என அறியப்படுபவருமான பி.உன்னிகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
2010ல் முதன்முறையாக மம்முட்டியை வைத்து பிரமாணி என்கிற படத்தை இயக்கிய பி உன்னிகிருஷ்ணன் 13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் மம்முட்டியுடன் கைகோர்த்திருக்கும் படம் என்பதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. இந்த படத்தில் சினேகா, அமலாபால், ஐஸ்வர்ய லட்சுமி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.