காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

விஜயசாந்தி நடித்து 1983ம் ஆண்டு வெளியான 'ராகாசி லோயா' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நரேஷ் வித்யாசாகர் ரெட்டி. தொடர்ந்து டாக்கு ஸ்டூவர்ட் புரம் தொங்கலு, ஓசினா மரதலா, ராமசக்கரோடு, அம்மா தொங்கா, அன்வேஷனா, ஆக்ஷன் நம்பர் ஒன், கைதி பிரதர்ஸ், ஊசி நா உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.
70 வயதான நரேஷ் வித்யாசாகருக்கு முதுமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானர். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகம் இரங்கல் தெரிவித்துள்ளது. பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா, நடிகை ஜமுனா, இயக்குனர் கே.விஸ்வநாத் என தெலுங்கு திரையுலம் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வருவது அங்குள்ளவர்களை கவலையடையச் செய்துள்ளது.