மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை திடீர் பல்டி | நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா |
மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் சமீபத்தில் ஆடுஜீவிதம் படம் வெளியானது. இந்த படத்தின் கதையும் பிரித்விராஜின் நடிப்பும் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதையுடன் இயக்குனர் பிளஸ்சியும், பிரித்விராஜும் கிட்டத்தட்ட 14 வருடங்களாக பயணித்து வந்ததாக இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இருவரும் கூறியுள்ளனர்,
இந்த நிலையில் இந்த படத்தை முதலில் இயக்க ஒப்புக்கொண்டு, பின்னர் விலகிவிட்டார் என பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸ் மீது இந்த படத்தின் கதாசிரியர் பென்யனின் சமீபத்தில் குற்றம் சாட்டும் விதமாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது ரசிகர்களிடமும் மலையாள திரையுலகிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது தான் இயக்கியுள்ள மந்தாகினி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு வரும் லால் ஜோஸ் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, 15 வருடங்களுக்கு முன்பு பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலால் ஈர்க்கப்பட்டு அதை படமாக இயக்க வேண்டும் என அவருடன் இணைந்து பயணித்தேன். இதை நானே தயாரிக்க வேண்டும் என்பதற்காக சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் பதிவு செய்து, ஒரு பிரிட்டிஷ் கம்பெனியின் கூட்டணியில் இணைந்து தயாரிக்க முடிவு செய்து வேலைகளையும் கவனித்து வந்தேன். ஆனால் ஒரு நாள் இயக்குனர் பிளஸ்சி என்னிடம் போன் செய்து இந்த படத்தை தான் இயக்க விரும்புவதாக கூறினார்.
கதாசிரியர் பென்யமினும் இயக்குனர் பிளஸ்சி இந்த படத்தை இயக்கினால் மகிழ்ச்சி அடைவார் என எனக்கு தோன்றியது. பின்னர் வந்த நாட்களில் நானும் இதிலிருந்து ஒதுங்கிக் கொண்டேன். ஆனால் 15 வருடங்கள் ஆனதாலோ என்னவோ இந்த விஷயத்தை வசதியாக மறந்து விட்டு இப்போது கதாசிரியர் பென்யமின் பேசுவது வருத்தத்தை தருகிறது. அதே சமயம் இயக்குனர் பிளஸ்சி இந்த படத்தை உருவாக்கி விதத்தில் எனக்கு மிகுந்த திருப்தி” என்று கூறியுள்ளார் லால் ஜோஸ்.