தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரித்விராஜ் நடிப்பில் ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியானது. பிளஸ்சி இயக்கத்தில் உருவான இந்த படம் எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலைத் தழுவி படமாக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஆறேழு வருடங்கள் பட தயாரிப்பில் இருந்த இந்த படம் இந்த வருடம் வெளியானது. அரபு நாட்டில் ஆடு மேய்க்கச் சென்ற இளைஞன் ஒருவன் சந்திக்கும் பிரச்னைகள் மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார். படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதுடன் 150 கோடி வரை வசூலித்தது.
சமீபத்தில் இந்த படத்தை பார்த்து ரசித்த பிரபல பாலிவுட் சீனியர் நடிகை ஜெயப்ரதா, ஆடுஜீவிதம் திரைப்படத்திற்கு நிச்சயமாக சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும் பிரித்விராஜின் நடிப்பு விவரிக்கவே முடியாத அளவிற்கு சிறப்பாக இருந்தது என்றும், பிளஸ்சி மீண்டும் தன்னை ஒரே வித்தியாசமான இயக்குனர் என நிரூபித்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 2011ல் இயக்குனர் பிளஸ்சி இயக்கிய பிரணயம் படத்தில் ஜெயப்ரதா மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.