சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300ஐ நெருங்குகிறது. 225 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மலையாள நடிகர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் நடிகை நிகிலா விமல், ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் இணைந்து நிவாரண உதவிகளில் ஈடுப்பட்டார். கண்ணூரைச் சேர்ந்த அவர், அங்குள்ள தலிம்பம்பா தாலுகாவின் நிவாரண மையத்தில் நிவாரண பொருட்களை மற்ற பகுதிகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுப்பட்டார். இது தொடர்பான வீடியோவை அவரது ரசிகர்கள் 'கேரளாவை மீட்போம்' என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மலையாள நடிகையான நிகிலா விமல் தமிழில் வெற்றிவேல், கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி, ரங்கா, போர் தொழில் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள 'வாழை' படம் விரைவில் வெளியாக இருக்கிறது.