வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் |
மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். சமீப காலமாக பட தயாரிப்பாளராகவும் மாறி வெற்றிகரமாக படங்களை தயாரித்து வருகிறார். அது மட்டுமல்ல தெலுங்கிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மலையாளத்தில் இவர் நடித்துள்ள ஜெய் கணேஷ் திரைப்படம் வரும் ஏப்-11ம் தேதி வெளியாக இருக்கிறது. ரஞ்சித் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் உன்னி முகுந்தனும் மகிமாவும் பம்பரமாக சுழன்று கலந்து கொண்டு வருகின்றனர்.
இன்னொரு பக்கம் உன்னி முகுந்தன் போலியோ மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு சக்கர நாற்காலிகளை இலவசமாக வழங்கியுள்ளார். ஜெய் கணேஷ் படத்தில் நடிகர் உன்னி முகுந்தனும் இதேபோன்று நடக்க முடியாமல் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் படம் முழுவதும் சக்கர நாற்காலியில் பயணிப்பவராகவே நடித்துள்ளார். அதனால் மாற்றுத்திறனாளிகளின் தேவையை தன்னால் உணர முடிந்தது என்றும் தன்னால் முடிந்த சிறிய உதவி இது என்றும் கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.