ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

சினிமாவுக்கு இணையான வேகத்தில் வெப் சீரிஸுகளும் வளர்ந்து வருகின்றன. முன்னணியின் நடிகர்களும் தயக்கமின்றி வெப் சீரிஸில் ஆர்வமாக பங்கேற்று நடித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள முன்னணி நடிகரான நிவின்பாலி முதன்முறையாக 'பார்மா' என்கிற வெப்சீரிஸில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். கதாநாயகியாக ஸ்ருதி ராமச்சந்திரன் மற்றும் முக்கிய வேடங்களில் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
மருத்துவ துறையில், குறிப்பாக பார்மசூட்டிக்கல்ஸ் எனப்படும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பின்னணியில் நடக்கும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு திரில்லர் ஜானரில் இந்த வெப் சீரிஸ் உருவாகி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க நிவின்பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'வருசங்களுக்கு சேஷம்' திரைப்படம் வரும் ஏப்ரல் 11 வெளியாக இருக்கிறது. இது தவிர தமிழில் 'ஏழு கடல் ஏழுமலை' மற்றும் மலையாளத்தில் 'மலையாளி ப்ரம்' இந்தியா ஆகிய படங்கள் நிவின்பாலி ஹீரோவாக நடித்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன.




