தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் |

ஜெயிலர் படத்தை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்த வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக அவ்வப்போது சென்னையிலிருந்து விமானம் மூலம் ஐதராபாத்துக்கு சென்று வருகிறார் ரஜினி.
இந்த நிலையில் ரஜினி சென்ற அதே விமானத்தில் பயணித்த நடிகை நிக்கி கல்ராணி, ரஜினியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்திருக்கிறார். அதோடு, தனது விமான டிக்கெட்டில் ரஜினிகாந்திடம் ஆட்டோகிராப் வாங்கி உள்ள அவர், என்னுடைய வாழ்வில் இது ஒரு சிறந்த விமான பயணம். எப்போதும் என்னுடைய பேவரிட் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்றும் கூறியிருக்கிறார். மேலும் ரஜினியுடன் எடுத்துக் கொண்டு செல்பி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதற்கு ரஜினியை சந்திக்கும் இந்த அரிய வாய்ப்பை தான் மிஸ் பண்ணி விட்டதாக நிக்கி கல்ராணியின் கணவரான நடிகர் ஆதி, பீல் பண்ணி ஒரு பதிவு போட்டுள்ளார்.




