'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா போன்ற படங்களை இயக்கிய பிரியா, தற்போது இயக்கி வரும் படம் பொன் ஒன்று கண்டேன். அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
ரொமாண்டிக் காதல் கதையில் உருவாகும் இந்த படத்தின் வெளியிட்டு தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகர் வசந்த் ரவி, தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், ‛‛இந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. ஜியோ ஸ்டுடியோஸ் என்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு அறிவிப்பா. பொன் ஒன்று கண்டேன் படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் என்ற இந்த அறிவிப்பு, இப்படம் சம்பந்தப்பட்ட யாரிடத்திலும் அனுமதி பெறாமல் வெளியாகி இருப்பது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. இந்த படத்தை டிவியில் ஒளிபரப்ப போவதாக பதிவிட்டு எங்களுக்கு மரியாதை செலுத்தியதற்கு நன்றி ஜியோ சினிமாஸ்.
ஒரு படம் சம்பந்தப்பட்ட வணிக ரீதியிலான விவகாரங்களில் நடிகர்கள் தலையிட முடியாது. என்றாலும் இது போன்ற அறிவிப்புகளை நேரடியாகவோ அல்லது படக்குழு மூலமாகவோ சொல்வதே சரியானது. இப்படி சமூக வலைதளங்கள் மூலமாக எங்களுக்கும் சேர்த்து அறிவிப்பது சரியல்ல என்று பதிவிட்டு இருக்கிறார்.
வசந்த் ரவி தமிழில் ‛தரமணி, ராக்கி, ஜெயிலர்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.