ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் எல்லாம் அடுத்ததாக அரசியலை நோக்கி தான் குறிவைத்து நகர்ந்து வருகிறார்கள். ஆனால் கேரளாவை பொறுத்தவரை நடிகர்களும் சரி, அங்குள்ள ரசிகர்களும் சரி சினிமாவையும் அரசியலையும் தனித்தனியாக பிரித்து வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் சமீப வருடங்களாக சினிமா பிரபலங்கள் அரசியலுக்குள் நுழைவது அதிகரிக்க துவங்கியுள்ளது.
அந்த வகையில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக மலையாள சினிமாவில் பிரபல நடிகராக மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருந்து வரும் நடிகர் சுரேஷ்கோபி கடந்த 2016ல் அரசியலில் அடி எடுத்து வைத்து பா.ஜ., கட்சியில் இணைந்தார். அந்த வருடமே ராஜ்யசபா எம்பி ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். அதே சமயம் 2019 நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியை தழுவினார்.
தனது அரசியல் நுழைவுக்காக சினிமாவிலிருந்து கொஞ்ச காலம் விலகி இருந்த சுரேஷ்கோபி, மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் அரசியல் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வருகிறார். இந்த நிலையில் வர இருக்கும் பார்லிமென்ட் தேர்தலில் மீண்டும் திருச்சூர் தொகுதியில் அவர் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது.