2025 பொங்கல் போட்டியில் அப்பா, மகன்? | தனது முந்தைய வசூலை முறியடிப்பாரா 'வேட்டையன் ' ரஜினிகாந்த் | 'வேட்டையன்' படமே கடைசி : வீடுகளாக மாறப் போகும் உதயம் தியேட்டர் | 'தேவரா' வசூல், வரவேற்பு : வருத்தத்தில் என்டிஆர் | குறைந்து போன ஓடிடி, சாட்டிலைட் உரிமை விற்பனை | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் மிஷ்கின் | இயக்குனர் ஆனார் பிரபல படத்தொகுப்பாளர் | பிளாஷ்பேக் : ‛டேய் இது இங்கிலீஷ் குரூப்புடா...' - பொன்மனச் செல்வன் படப்பிடிப்பில் விஜயகாந்த் கலாட்டா | தன் பெயரில் பண மோசடி விளம்பரம் : பாடகி சித்ரா எச்சரிக்கை | தாதாவுடன் பார்ட்டியில் கலந்து கொண்டேனா? - பிரயாகா மார்டின் விளக்கம் |
மலையாளத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் மோகன்லால் நடிப்பில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான திரிஷ்யம் படமும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அதன் இரண்டாம் பாகமான வெளியான திரிஷ்யம் 2 படமும் சரிசமமான அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதில் முதல் பாகம் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தி, சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இரண்டாம் பாகம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான இப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் ஹாலிவுட்டை சேர்ந்த பனோரமா ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம் இந்தப் படத்தை ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன் உள்ளிட்ட 10 மொழிகளில் ரீமேக் செய்து வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாலிவுட்டை சேர்ந்த பலரும் ஹிந்தியில் வெளியான திரிஷ்யம் படத்திற்கு கிடைத்த பெருமை தான் இது என்பது போல பேசி வருகின்றனர். ஆனால் ஒரிஜினல் திரிஷ்யம் ரசிகர்கள் இது ஜீத்து ஜோசப், மோகன்லாலுக்கான படம்.. அதை மறைக்க முடியாது என்று சோசியல் மீடியாவில் விவாதத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஜீத்து ஜோசப், “என்னுடைய உருவாக்கத்தில் உருவான ஒரு படம் ஹாலிவுட்டிலும் ரீமேக் ஆகிறது என்பது ஒரு இயக்குனராக எனக்கு மிகவும் பெருமை தான்.. காரணம் இதன் கதை யுனிவர்சல் அம்சம் கொண்டது. ஒரு கிரைம் த்ரில்லர் என்பதை விட ஒரு குடும்பத்தின் அன்பு மற்றும் பாதுகாப்பை பற்றிய கதை என்பதால் தான் வெவ்வேறு மொழிகளில் உள்ள ரசிகர்களும் இதை தங்களுடன் பொருத்திப் பார்த்துக் கொள்கின்றனர்.
ஹிந்தியில் வெளியாகும் சில படங்கள் மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகும் போது சில நேரங்களில் ஒரிஜினலை விட அதிக வரவேற்பை பெற்றது உண்டு. இருந்தாலும் இந்த படத்தை பார்த்து ரசித்தவர்களுக்கு இதன் ஒரிஜினல் படமானது மோகன்லால் நடிப்பில் என்னுடைய இயக்கத்தில் உருவானது என்பது நன்றாகவே தெரியும்” என்று கூறி இந்த விவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.