சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
மறைந்த பிரபல மலையாள நடிகர் சுகுமாரனின் மூத்த மகன் இந்திரஜித் மற்றும் இளைய மகன் பிரித்விராஜ். இருவருமே பிரபல நடிகர்களாக வலம் வருகிறார்கள். இதில் நடிகர் பிரித்விராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த 'லூசிபர்' என்கிற படத்தை இயக்கி வெற்றிகரமான இயக்குனர் என்கிற பெருமையும் பெற்றார். அதை தொடர்ந்து ப்ரோ டாடி, படத்தை இயக்கியவர் தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் பிரித்திவிராஜின் அண்ணன் இந்திரஜித் சுகுமாரனும் டைரக்ஷனில் இறங்குகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
இவர் தமிழில் என் மன வானில், சர்வம் மற்றும் இன்னும் வெளியாகாத நரகாசுரன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். லூசிபர் படத்தில் பிரித்விராஜுடன் இணைந்து பணியாற்றிய கதாசிரியரும், நடிகருமான முரளி கோபி தான் இந்திரஜித் படத்திற்கும் கதை எழுதி வருகிறாராம். மோகன்லாலை ஹீரோவாக வைத்து பிரித்விராஜ் தனது முதல் படத்தை இயக்கினார் என்றால் இந்திரஜித் தனது தம்பி பிரித்விராஜை கதாநாயகனாக வைத்தே தனது முதல் படத்தை இயக்க இருக்கிறாராம் .