விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சவுமியா ஷெட்டி இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமான இவர், அதன் பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். யுவர்ஸ் லவ்விங்லி, தி டிரிப் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சவுமியா ஷெட்டி தனது தோழி வீட்டில் ஒரு கிலோ வரை தங்க நகை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தொண்டபர்த்தியில் வசிக்கும் பிரசாத் பாபு என்பவர் வீட்டில் ஒரு கிலோ 750 கிராம் தங்கம் திருட்டு போனது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது நடிகை சவுமியா ஷெட்டி நகைகளை திருடியது தெரிய வந்தது.
பிரசாத் பாபுவின் மகள் மவுனிகாவுடன் நட்பை ஏற்படுத்தி அவரது வீட்டுக்கு சவுமியா அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பீரோ சாவியை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கிலோ தங்க நகைகளை திருடியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கோவாவில் தங்கி இருந்த சவுமியா ஷெட்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 74 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            