நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த 2017ல் பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி எட்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். சுமார் மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளிவந்த திலீப் இப்போது வரை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணையானது இப்போது வரை சிறிய இடைவெளிகள் விட்டு விட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திலீப்புக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என விசாரணை குழு தரப்பிலிருந்து கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
திலீப்பிற்கு ஜாமின் வழங்கியபோது அவர் வெளியில் சென்று சாட்சிகளின் மனதை கலைப்பது, சாட்சியங்களை அழிப்பது, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக சிறப்பு புலனாய்வு குழுவிற்கு இடைஞ்சல்கள் கொடுப்பது உள்ளிட்ட எந்த விஷயங்களையும் செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பிய விதிமுறைகளை திலீப் மீறிவிட்டார்.. அதனால் அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அதில் காரணம் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட நிறைவுப் பகுதியை எட்டியுள்ள நிலையில், சிறப்பு விசாரணைக்குழு அதிகாரி குறுக்கு விசாரணை செய்ய வேண்டியது மட்டுமே பாக்கி இருக்கிறது. இந்த நிலையில் திலீப்பின் ஜாமினை ரத்து செய்வது வேறு சில சிக்கல்களுக்கு வழி வகுக்கலாம் என்று கூறி ஜாமினை ரத்து செய்ய மறுத்துவிட்டது.