‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் |

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன், இறைவன் ஆகிய படங்கள் ஏமாற்றத்தை தந்தாலும் சைரன் படம் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. தற்போது ஜெயம் ரவியின் 33வது படமான 'காதலிக்க நேரமில்லை' படத்தை அமைச்சர் உதயநிதியின் மனைவி மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். முழு நீள காதல் படமாக உருவாகும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் மட்டுமே மீதமுள்ளது. விரைவில் மொத்த படப்பிடிப்பை முடித்து மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர ஜெயம் ரவி நடித்துள்ள மற்றொரு படமான ‛பிரதர்' விரைவில் ரிலீஸாக உள்ளது.