சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படம் கடந்த சில வருடங்களாகவே தயாரிப்பில் உள்ளது. இந்தப் படத்துடன் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பையும் ஷங்கர் நடத்தியதால் இரண்டு படங்களின் வேலைகளும் தாமதமாகி ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது.
இந்த வருடமாவது இந்தப் படம் வெளியாகுமா என்று ராம் சரண் ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தார்கள். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த வருட கிறிஸ்துமஸ் தினத்தில் படத்தை வெளியிட உள்ளதாகச் சொல்கிறார்கள். இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
அடுத்த மாதம் ராம்சரணின் பிறந்தநாள் வர உள்ளது. அன்றைய தினத்தில் பட வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளார்களாம். 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளியில் வெளியாக உள்ள ராம் சரண் படம் இது.




