கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
தமிழ்த் திரையுலகில் ஒரு சில படங்கள் மட்டுமே அபூர்வமாக பலராலும் பாராட்டப்படும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றாக தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்த 'திருச்சிற்றம்பலம்' படம் அமைந்தது. தமிழில் தனுஷ் நடித்து கடைசியாக வெளிவந்த இரண்டு படங்களும் ஓடிடியில் வெளிவந்து நெகட்டிவ்வான விமர்சனங்களைத்தான் அதிகம் பெற்றது. ஆனால், 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள்தான் கிடைத்தது.
அப்படத்தில் பழம் என்கிற திருச்சிற்றம்பலம் கதாபாத்திரத்தில் தனுஷைப் பற்றி எந்த அளவு பேசுகிறார்களோ, அதைவிடவும் அவரது தோழியாக ஷோபனா கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனன் பற்றி பேசுகிறார்கள். இந்தப் படம் இந்த அளவிற்கு வரவேற்பைப் பெற நித்யா மேனனும் முக்கிய காரணம் என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.
தமிழில் எப்போதாவதுதான் நித்யா மேனன் நடித்தாலும் அவரது நடிப்பால் பேச வைத்துவிடுவார். ஷோபா போன்ற தோழியர் நமக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்களை ஏங்க வைத்தது அவரது நடிப்பு. தமிழ் சினிமாவில் மனதை விட்டு அகலாத கதாபாத்திரங்களில் ஷோபனாவும் இருப்பார்.
படத்திற்குக் கிடைத்த வரவேற்பிற்கு நித்யா மேனன், “ஷோபனா மீதான அன்புக்கு நன்றி. எல்லோராலும் பேசப்படும் இப்படத்தைப் பாருங்கள்,” என நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.