ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா |
தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பியுமான கிருஷ்ணா 'அஞ்சலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார். 'அலிபாபா' படத்தின் மூலம் ஹீரோவானார். கற்றது களவு, கழுகு, கழுகு 2, வல்லினம், யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன், வன்மம், யட்சன், பண்டிகை, களரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனாலும் கிருஷ்ணாவால் தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. கடைசியாக 'ராயர் பரம்பரை' படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள படம் 'ஜோஸ்வா இமைபோல் காக்க'. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி உள்ள இந்த படத்தில் அவர் ஹீரோ வருனுடன் மோதும் வில்லனாக நடித்திருக்கிறார். கிருஷ்ணாவின் புதிய வில்லன் அவதாரம் அவரது கேரியருக்கு கை கொடுக்குமா என்பது படம் வெளிவந்ததும் தெரியவரும். படம் வருகிற மார்ச் 1ம் தேதி வெளிவருகிறது.
படத்தில் நடித்திருப்பது குறித்து கிருஷ்ணா கூறும்போது, "கவுதம் மேனன் தனது படத்தில் சிறிய துணை கதாபாத்திரத்தைக் கூட சிறப்பாக வடிவமைத்து பார்வையாளர்களைக் கவர்ந்து விடுவார். அப்படி இருக்கும்போது, இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பு கிடைத்ததும், தயங்காமல் ஒப்புக்கொண்டேன். இதில் சவாலான ஸ்டன்ட்கள் இருந்தாலும் அதை விரும்பியே ஏற்றுக் கொண்டேன் .
கவுதம் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவருடன் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆக்ஷனுக்கு என வரையறுத்த எல்லைகளைத் தாண்டி நானும், வருணும் நடித்துள்ளோம். படம் பார்வையாளர்களுக்கு பரபரப்பான அனுபவம் தருவதோடு அவர்கள் மகிழும்படியான தருணங்களையும் கொண்டிருக்கும்" என்றார்.