குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் | த மெட்ராஸ் மிஸ்டரி : அது சாந்தனு அல்ல, யோஹன் சாக்கோ |
நடிகர் ரஜினிக்கு பாலிவுட் புதிதல்ல. 1983ம் ஆண்டு 'அந்தாகனூன்' படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார். அதன்பிறகு ஜீத் ஹமாரி, மெரி அதாலத், ஜான் ஜானி ஜனார்த்தனன், மகாகுரு, கிராப்தார், பகவான் தாதா உள்பட பல படங்களில் நடித்தார். ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது ரஜினியின் படங்கள் ஹிந்தியிலும் ஓடுவதையொட்டி நேரடி ஹிந்தி படம் ஒன்றில் நடிக்கும் சாத்திய கூறுகள் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
பிரபல பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சஜித் நாடியாட்வாலா. தனது குடும்பத்தினருடன் ரஜினியை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு ரஜினியின் திருமணநாள் தொடர்பான சந்திப்பாக கருதப்பட்டாலும், ரஜினி பாலிவுட் படத்தில் நடிப்பதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்திருப்பதாக தெரிகிறது.
சந்திப்பு படங்களை வெளியிட்டுள்ள சஜித் இதுகுறித்து மறைமுகமாக தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் "லெஜென்ட் ரஜினி சாருடன் இணைந்திருப்பது எனக்குப் பெருமையான விஷயம். இந்த மறக்க முடியாத பயணத்தை ஒன்றாகத் தொடங்குவதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம்" என எழுதியுள்ளார்.
ஒருவேளை இந்தப்படம் உறுதியாகும் பட்சத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பான் இந்தியா படமாக உருவாகும் என தெரிகிறது.