இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
பழம்பெரும் நாடக, சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகரும், கதாசிரியருமான ‛அடடே' மனோகர், 77, சென்னையில் காலமானார். சென்னை, குமரன்சாவடி பகுதியில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.
சென்னையை சேர்ந்த மனோகர் ஆரம்ப காலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றினார். அங்கு இருந்தபடியே நாடகங்களில் நடிக்க தொடங்கினார். 3500 மேடை நாடகங்களில் நடித்துள்ளார் மனோகர். எண்ணற்ற டிவி, ரேடியோ நாடகங்களில் தனது பங்களிப்பை சிறப்புற செய்திருக்கிறார். அதில் 6 நாடகங்களுக்கு மேல் அவரே எழுதி, இயக்கி உள்ளார். இதுதவிர வெள்ளித்திரையில் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களிலேயே இவர் நடித்தார். குறிப்பாக எஸ்வி சேகர், கிரேஸி மோகன் உள்ளிட்டோரின் நாடகங்களில் பணியாற்றி உள்ளார்.
‛‛சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, கையளவு மனசு, பிளைட் 172, நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி வெசஸ் ரமணி, பிரேமி, இரயில் சிநேகம், வண்ணக்கோலங்கள்...'' உள்ளிட்டவை சின்னத்திரை சீரியல்களில் இவர் நடித்த முக்கிய நாடகங்கள் ஆகும்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி காலமானார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.