'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த 2004ல் தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'கில்லி'. இது தெலுங்கில் வெளிவந்த ஒக்கடு என்கிற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய காலகட்டத்தில் அதிகளவில் வசூலித்த தமிழ் படமாக மாறியது. வித்யாசாகர் இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.
கடந்த சில நாட்களாக இப்படம் வருகின்ற ஏப்ரல் 17ந் தேதி அன்று ரீ-ரிலீஸ் ஆகிறது என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இப்போது கில்லி பட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அளித்த பேட்டி ஒன்றில், "யார் இந்த தகவலைக் பரப்பிவிட்டனர் என தெரியவில்லை. கில்லி ரீ-ரிலீஸ் தேதியை நாங்களே இன்னும் முடிவு செய்யவில்லை. மார்ச் கடைசி வாரத்தில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறோம் முடிந்த அளவிற்கு தேர்தலுக்கு முன்பே வெளியிட முயற்சித்து வருவதாக தெரிவித்திருந்தார்.