பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

சைரன் படத்தை அடுத்து பிரதர், சீனி, தக்லைப் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த நிலையில் விரைவில் ஜெயம் ரவி இயக்குனராக அவதாரம் எடுக்க போவதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு தன்னிடமுள்ள மூன்று கதைகளில் ஒரு கதையில் நடிப்பதற்கு யோகி பாபுவிடம் 500 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விட்டதாக கூறியிருக்கும் ஜெயம் ரவி, மேலும், இரண்டு படங்களை தானே இயக்கி நடிக்க போவதாக கூறியுள்ளார். அதனால் ஜெயம் ரவி இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே தனுஷ் படங்கள் இயக்கி நடித்து வரும் நிலையில், அடுத்து சிம்புவும் ஒரு படத்தை இயக்கி, நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. அதேபோல் விஷாலும் துப்பறிவாளன்- 2 படத்தை இயக்கி நடிக்கப் போகிறார். இவர்கள் வரிசையில் விரைவில் ஜெயம் ரவியும் இணையப்போகிறார்.




