பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படம் வெளியானது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகி இருந்த இந்த படத்தை இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ளார். வழக்கமாக இவரது படங்களில் அறிமுகமாகும் புது முகங்கள் பலரும் மிகப்பெரிய அளவில் வெளிச்சம் பெற்று அடுத்தடுத்து கதாநாயகன், கதாநாயகிகளாக வலம் வருகின்றனர். அந்த வகையில் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் அறிமுக நடிகை கதா நந்தி.
இந்த படத்தில் கதாநாயகியாக பெங்காலி மொழியை சேர்ந்த சோனாலி குல்கர்னி என்பவர் நடித்திருந்தாலும் படத்தில் அதிக காட்சிகளில் நடித்தவரும் கதையின் திருப்புமுனைக்கு காரணமாக அமைந்தவருமான கதா நந்தி தான் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளார். இப்போதே பல இயக்குனர்கள் தங்களது படங்களில் இவரை நடிக்க வைக்க அணுகி வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.