ஜூலையில் புதிய தொழில்நுட்பத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் மணிச்சித்திரதாழ் | அந்த வார்த்தையை மட்டும் பயன்படுத்தாதீர்கள் : பார்வதிக்கு இயக்குநர்கள் வேண்டுகோள் | ராணுவ படத்துக்காக சரத்குமாருடன் கைகோர்த்த மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் | தர்ஷனுக்கு உதவி செய்த நபர் கைது : விஷயம் கேள்விப்பட்ட தந்தை ஹார்ட் அட்டாக்கில் மரணம் | நடிகரின் மனைவியிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு காந்தாரா நாயகி வழக்கு | சல்மான் கான் - அட்லி புதிய கூட்டணி? | இந்த வாரம்… 'டல்' ஆன வாரம்… | 'கண்ணப்பா' - தெலுங்கு தயாரிப்பாளர்களின் கவனம் ஈர்த்த ப்ரீத்தி முகுந்தன் | ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு ரவீனா டாண்டன் நோட்டீஸ் | கல்கி 2898 ஏடி - கமல்ஹாசன் நடித்தும் கண்டுகொள்ளாத வினியோகஸ்தர்கள் |
மலையாளத்தில் கடந்த மே மாதம் வெளியான 2018 என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக நடித்தவர் மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி. தற்போது இவர் டிக்கி டாக்கா என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ரோகித் என்பவர் இயக்கி வருகிறார். சமீபத்தில் கொச்சி அருகில் உள்ள பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது ஆக்ஷன் காட்சிகளில் நடித்த ஆசிப் அலிக்கு எதிர்பாராத விதமாக முழங்காலில் பலத்த அடிபட்டது.
இதனைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். அவரது முழங்காலை பரிசோதிக்க மருத்துவர்கள் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதன்பிறகு குறைந்தபட்சம் மூன்று மாதமாவது அவர் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்ப்பட்டுள்ளது.