மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தமிழில் பிரபல ஹீரோக்களின் படங்கள் தொடர்ந்து டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வசூலையும் குவித்து வருகின்றன. மலையாள திரையுலகை பொறுத்தவரை சில முன்னணி நடிகர்களின் பிறந்தநாளுக்கு மட்டுமே இதுபோன்று அவர்களது படங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் மலையாள திரையுலக வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற மணிச்சித்திரதாழ் திரைப்படம் 4K முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு வரும் ஜூலை மாதம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஸ்வர்க்க சித்ரா அப்பச்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1993ல் மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா நடிப்பில் இயக்குனர் பாசில் இயக்கிய மணிச்சித்திரதாழ் படம் ஸ்பிலிட் பர்சனாலிட்டியை மையப்படுத்தி ஒரு சைக்காலஜி திரில்லராக உருவாகியிருந்தது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படம் அதில் நடித்த நாயகி ஷோபனாவுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.
பல வருடங்கள் கழித்து தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி என்கிற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. அது மட்டுமல்ல கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு எல்லா இடங்களிலும் நல்ல வெற்றியை பெற்றது. இந்த படம் வெளியாகி தற்போது முப்பது வருடங்கள் கழித்து மீண்டும் டிஜிட்டலில் ரீ ரிலீஸ் ஆக இருப்பதால் இந்தப் படத்திற்கென்றே உள்ள ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.