ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
மலையாள திரையுலகில் ராணுவ சம்பந்தப்பட்ட படங்களாக இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர் மேஜர் ரவி. ராணுவ அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் தொடர்ந்து ராணுவ கதை அம்சம் கொண்ட படங்களாக இயக்கி வந்தார். அதில் கீர்த்தி சக்ரா, குருசேத்ரா, காந்தஹார், கர்ம யோதா என பெரும்பாலும் மோகன்லாலை வைத்தே அதிக படங்களை இயக்கியுள்ளார். பிரித்விராஜை வைத்து இதே ராணுவ பின்னணியில் பிக்கெட் 43 என்கிற ஹிட் படத்தை கொடுத்த அவர் அதன் பிறகு மோகன்லால் இரண்டு வேடங்களில் நடித்த 1971 : பியாண்ட் பார்டர்ஸ் என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அதன் பிறகு டைரக்ஷனுக்கு இடைவெளி விட்ட அவர் ஒரு நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பியுள்ள மேஜர் ரவி ஆபரேஷன் ராஹத் என மீண்டும் ஒரு ராணுவ பின்னணி கொண்ட உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையை இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் சரத்குமார் நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது போஸ்டருடன் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள சரத்குமார் கிட்டத்தட்ட 10 வருட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வெளியான கிறிஸ்டோபர் மற்றும் திலீப் நடித்த பாந்த்ரா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் தயாராகும் ஆபரேஷன் ராஹத் படத்தில் கதாநாயகனாகவே நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.