சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' |

ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்தின் மாபெரும் வெற்றி, வசூலுக்குப் பிறகு பான் இந்தியா இயக்குனராக உயர்ந்தவர் அட்லி. அப்படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜூன் நடிக்க உள்ள படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. அந்த கூட்டணி ஏறக்குறைய உறுதியானது என்று சொல்லப்பட்டது. ஆனால், அட்லியின் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தையில் அது தோல்வியில் முடிந்தது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, சல்மான் கானிடமும் அட்லி ஒரு கதையைச் சொல்லியிருந்தாராம். அதைக்கேட்ட சல்மான் இப்போது படத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் ஒரு பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என சல்மான் கான் நினைக்கிறாராம். 1000 கோடி படங்கள் என்பது பாலிவுட்டில் புதிய டிரெண்டாகி உள்ளது. அதுபோல தன்னுடைய படமும் வசூல் சாதனை படைக்க வேண்டும் என்பதால்தான் அட்லியுடன் கூட்டணி என்கிறார்கள்.
இந்தக் கூட்டணியாவது உறுதியாக நடக்குமா அல்லது அல்லு அர்ஜுன் கூட்டணி போல ஆரம்ப நிலையிலேயே கலையுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.