ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் ஆகியோருடன் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்த்த சாதனையைப் புரியாமல் போய்விட்டது.
இந்தப் படத்தின் தமிழக வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு நடக்காமல் தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு மொழியிலும் முக்கிய பிரபலங்களை நடிக்க வைத்தால் வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தார்கள். தமிழிலிருந்து கமல்ஹாசனை நடிக்க வைத்தார்கள். ஆனால், அவர் நடித்தாலும் தமிழக வினியோகஸ்தர்கள் இப்படத்தைக் கண்டு கொள்ளவில்லையாம்.
அவர்கள் குறிப்பிட்ட விலைக்கு படத்தை யாரும் முன் வரவில்லை என்று தகவல். ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் கொடுத்தால் அதிக தியேட்டர்களை போட்டுத் தருவார்கள் என அணுகினார்களாம். அவர்களோ பத்து கோடிக்கு மேல் தரவே முடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.
பின்னர் தெலுங்கு தயாரிப்பாளரான திருப்பதி பிரசாத் சுமார் 20 கோடிக்கு தமிழக உரிமையை வாங்கினாராம். அவர் வினியோகர்களிடம் பேசியதில் அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. கடைசியாக ஒரு யோசனையை அவர்களுக்கு சொல்லியிருக்கிறார் திருப்பதி பிரசாத்.
அதாவது, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தான் தயாரிக்கும் படத்தின் வினியோக உரிமையை 'கல்கி 2898 ஏடி' படத்தை வாங்குபவர்களுக்குத் தருகிறேன் என்றாராம். அதனால் தற்போது படத்தை வாங்க முன் வந்திருக்கிறார்களாம். பிரபாஸ் படத்தை விற்பதற்கே சிவகார்த்திகேயன் தேவைப்படுகிறார் என்பதுதான் இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்.