ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
சோழவந்தான் : மதுரை, சோழவந்தான் அருகே தென்கரையில் பழம்பெரும் நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் நுாற்றாண்டு மற்றும் சிலை திறப்பு விழா 2 நாட்கள் நடந்தது.
தென்கரை அக்ஹாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. அவரது பேரன் ராஜேஷ் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். வீட்டின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியில் நடிகராக, பாடகராக அவர் பெற்ற விருதுகள், விழாக்கள், வாழ்க்கை குறித்த போட்டோக்களை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
மாலையில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் குழுவினரின் 'சாருகேசி' என்ற இசை கலைஞர்கள் பற்றிய நாடகம் நடந்தது. நடிகர் செந்தில் உட்பட திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
இரண்டாம் நாளான நேற்று காலை வலையபட்டி சுப்பிரமணியம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. டி.ஆர்.மகாலிங்கம் மற்றும் கோமதி மகாலிங்கம் தொண்டு அறக்கட்டளை சார்பில் நிறுவிய மகாலிங்கம் சிலைத் திறப்பு விழாவை பின்னணி பாடகி சுசீலா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்., திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவர் ராஜேஷ், நடிகர்கள் சந்தானபாரதி, சச்சு, பார்வதி, சீர்காழி சிவசிதம்பரம் சிலையை திறந்து வைத்தனர்.
'இன்றைய இளைஞர்களையும் டி.ஆர். மகாலிங்கத்தின் 'செந்தமிழ் தேன் மொழியாள்' பாடல் கவர்ந்துள்ளது' என நடிகர் நாசரும், 'எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திற்கு முன் சினிமாவில் நடிகர், பாடகர் இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என உச்சத்தில் இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம்' என ராஜேஷூம் பேசினர்.
பாடகி சுசீலா சில பாடல் வரிகளை விழாவில் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார். தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா 'செந்தமிழ் தேன்மொழியாள்' பாடலுக்கு நடனமாடினார். ஏற்பாடுகளை ராஜேஷ் குடும்பத்தினர் செய்திருந்தனர்.