அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

இதுவரை 750 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் நாசர். குணசித்ரம் மற்றும் வில்லன் வேடங்களில் அதிகமாக நடித்துள்ளார். மாயன், அவதாரம் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் பல வருட இடைவெளிக்கு பிறகு அவர் தற்போது 'கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி' என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
நாசர் நாயகனாக நடித்த 'அவதாரம்' படத்திற்கு இசை அமைத்த இளையராஜா இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார். படத்தை, எக்ஸ்போரியா ஐஜீன் புரொடக்ஷன்ஸ், ஜென் வெர்ஸ் மற்றும் எம்பர்லைட் ஸ்டுடியோஸ் சார்பில் சசி நாகா,சுரேஷ் செல்வராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தனபால் பத்மநாபன் எழுதி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது " கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரான படங்களுக்கு எப்பவும் மக்களிடத்தில் மதிப்பு அதிகம் இருக்கும். அன்று தொடங்கி இன்று, 'லப்பர் பந்து, குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி' போன்ற படங்கள் வரை மாபெரும் ஹிட் படங்களாக மக்கள் கொண்டாடுகிறார்கள். அந்த வகை படமாக 'கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி' உருவாகி வருகிறது.
தந்தை - மகன் உறவு பற்றிய நெகிழ்ச்சி மிகுந்த இக்கதையின் நாயகனாக நாசர் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடை பெற்று வருகிறது" என்றார்.