சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

தமிழ் சினிமா ஆளுமைகளில் முக்கியமானவர் ஸ்ரீப்ரியா, சிவாஜி, ரஜினி, கமல், கார்த்திக் என மூன்று தலைமுறை ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். தென்னிந்திய மொழிகளில் 300க்கும் அதிகமான படங்களில் நடித்தவர்.
ஆனால் அவர் சில படங்களை இயக்கவும் செய்தார். 1984ம் ஆண்டு 'சாந்தி முகூர்த்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அவர் நடித்த 'ஆட்டுக்கார அலமேலு' படத்தின் வெற்றிக்கு பிறகு அதே பாணியில் 'எங்க ஊரு ஆட்டுக்காரன் 'என்ற படத்தை இயக்கினார்.
தொடர்ந்து தமிழில் 'நானே வருவேன், மாலினி 22 பாளையங்கோட்டை' படங்களை இயக்கினார். 'நாகினி' என்ற படத்தை கன்னடத்தில் இயக்கினார். கடைசியாக மலையாளத்தில் வெளிவந்த 'திரிஷ்யம்' படத்தை தெலுங்கில் இயக்கினார்.