200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'டாக்சிக் - ராயா' வீடியோ | சமமான சம்பளத்திற்காக குரல் கொடுக்கும் சுதா கொங்கரா! | வேதநாங் ரெய்னா, குஷி கபூரின் 2 வருட காதல் முறிந்ததா? | ரேட்டிங்கிற்குத் தடை வாங்கிய சிரஞ்சீவி படத் தயாரிப்பாளர் | தமன்னா கீ ரோலில் நடித்துள்ள 'ஓ ரோமியோ' ஹிந்தி படம் பிப்.,13ல் ரிலீஸ்! | ஜனவரி 15ல் திரைக்கு வரும் 'திரௌபதி- 2' படத்தின் டிரைலர் வெளியானது! | 'டாக்சிக்' படத்தில் நடிக்க 15 கோடி சம்பளம் வாங்கிய நயன்தாரா? | நடிகைக்கு ஷாக் கொடுத்த டிராகன் நடிகர் | கணவர் நடிகருடன் மல்லுக்கு நிற்கும் மனைவி நடிகை | ரஜினி வசனமும் நானும்! கண்ணா ரவியின் மகிழ்ச்சி |

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று'. கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து வெளியானது. இப்படம் தற்போது ஹிந்தியில் 'சர்பிரா' என்கிற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் கதாநாயகனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தை வருகின்ற ஜூலை 12ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




