''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
மும்பை : பிரபல ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா. இவர், 2021ம் ஆண்டு ஆபாச படங்களை தயாரித்து, அதை மொபைல் செயலிகளில் பதிவேற்றியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்; பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் நடிகை ஷில்பாவும், கணவர் குந்த்ராவும் மீண்டும் மோசடி வழக்கில் சிக்கியுள்ளனர். தங்க திட்டம் என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த திட்டத்தில் தன்னிடம் 90 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகை மற்றும் அவரது கணவர் மீது, மும்பை வர்த்தகர் பிரித்விராஜ் சரேமல் கோத்தாரி என்பவர் மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: 'சத்யுக் கோல்ட்' என்ற பெயரில் ஷில்பாவும், குந்த்ராவும் இணைந்து தங்க திட்டத்தை துவங்கினர். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு லாபகரமான தங்கம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி என்னை சேர்த்தனர். இதை நம்பி, அவர்களது தங்க திட்டத்தில் 90 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தேன். முதிர்வு காலம் 2019 ஏப்ரல் 2 என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள், நான் செய்த முதலீட்டுக்கான தங்கத்தை தராமல் ஏமாற்றினர். எனவே, கோர்ட் தகுந்த நடவடிக்கை எடுத்து, என் பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவுடன் ஷில்பா ஷெட்டி கையெழுத்திட்ட தங்க திட்டம் தொடர்பான கடிதம் மற்றும் சத்யுக் கோல்ட் பிரைவேட் நிறுவனம் வழங்கிய விலைப் பட்டியலையும் கோர்ட்டில் கோத்தாரி தாக்கல் செய்தார்.
இந்த மோசடி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.