ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

சமீபத்தில் மலையாளத்தில் நடிகர் மம்முட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் ; தி கோர் என்கிற திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பல இடங்களில் இருந்து பாசிடிவான விமர்சனங்கள் கிடைக்கின்றன. இந்த படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதையை ஆதர்ஷ் சுகுமாறன் மற்றும் பால்சன் என்கிற இரட்டை கதாசிரியர்கள் இணைந்து எழுதியுள்ளனர்.
இந்த கதையை முதலில் எழுதியதும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர்கள் அணுகியது மலையாள குணச்சித்திர நடிகரான மேத்யூ தேவசி என்பவரைத்தான். அவரும் நடிக்க சம்மதித்து விட்டார். அதன்பிறகு இந்த கதையை கிட்டத்தட்ட 10 முதல் 12 இயக்குனர்கள் வரை இவர்கள் கூறியும் பல காரணங்களால் அவர்கள் அனைவருமே இந்த படத்தை இயக்க மறுத்து விட்டனர்.
இறுதியாக இயக்குனர் ஜியோ பேபியிடம் இந்த கதையை கொண்டு சென்றபோது அவருக்கு இந்த கதை ரொம்பவே பிடித்து விட்டது. அவர்தான் இந்த கதாபாத்திரத்தில் மம்முட்டியை நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என்கிற ஆலோசனையைக் கூற, மம்முட்டிக்கும் இந்த கதை பிடித்துப்போய் விட்டது. அதில் நடித்ததன் மூலம் தற்போது இன்னும் ஒரு வெற்றி படத்திற்கு சொந்தக்காரராக மம்முட்டி மாறிவிட்டார்.