குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
மலையாளத்தில் கடந்த மே மாதம் வெளியான 2018 என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக நடித்தவர் மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி. தற்போது இவர் டிக்கி டாக்கா என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ரோகித் என்பவர் இயக்கி வருகிறார். சமீபத்தில் கொச்சி அருகில் உள்ள பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது ஆக்ஷன் காட்சிகளில் நடித்த ஆசிப் அலிக்கு எதிர்பாராத விதமாக முழங்காலில் பலத்த அடிபட்டது.
இதனைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். அவரது முழங்காலை பரிசோதிக்க மருத்துவர்கள் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதன்பிறகு குறைந்தபட்சம் மூன்று மாதமாவது அவர் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்ப்பட்டுள்ளது.