சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் |
கடந்த 2019ம் ஆண்டில் புரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் பொத்தினெனி நடித்து வெளிவந்த 'ஐ ஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'டபுள் ஐ ஸ்மார்ட்' எனும் பெயரில் இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த பாகத்தையும் புரி ஜெகநாத் இயக்குகிறார். இதில் ராம் பொத்தினெனி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் இதன் படப்பிடிப்பை தொடங்கினர்.
இந்த நிலையில் இப்போது இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.