கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

மலையாள திரையுலகில் பிரபல எழுத்தாளரும், இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் பல டாக்குமென்டரி படங்களையும் அதன் பிறகு திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். குறிப்பாக 1987ல் மம்முட்டியை ஹீரோவாக வைத்து ஆனந்தராம் என்கிற படத்தை இயக்கினார். அதனைத் தொடர்ந்து மதிலுகள் மற்றும் விதேயம் என மம்முட்டியை வைத்தே தொடர்ந்து படங்களை இயக்கினார். இதில் மதிலுகள் திரைப்படம் இவருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதையும், சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. அதேபோல விதேயம் படமும் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்று தந்தது.
இப்படி பலமுறை தேசிய விருதுகளை பெற்ற அடூர் கோபாலகிருஷ்ணன் கடைசியாக 2016ல் திலீப், காவ்யா மாதவன் இணைந்து நடித்த பின்னேயும் என்கிற படத்தை இயக்கினார். அதன்பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனராக தற்போது களம் இறங்குகிறார். இந்த முறை மம்முட்டியை வைத்து அவர் படம் இயக்குகிறார். 32 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் இணையும் இந்த படத்திற்கு படயாத்ரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தான் இந்த படத்தை தயாரிக்கிறது.




