பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
1978ம் ஆண்டு இன்றைய முன்னணி சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருந்த காலம். இருவரும் தனித் தனி ஹீரோக்களாக நடிப்போம் என பேசி வைத்துக் கொண்டு நடிக்க ஆரம்பித்த காலம்.
1978ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கமல்ஹாசன் நடித்த 'சிகப்பு ரோஜாக்கள்', ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த 'அவள் அப்படித்தான்', ரஜினிகாந்த் நடித்த 'தாய் மீது சத்தியம், தப்புத் தாளங்கள்', தெலுங்கு நடிகர் முரளி மோகன், ஸ்ரீதேவி நடித்த 'மனிதரில் இத்தனை நிறங்களா', விஜயகுமார் நடித்த 'தங்கரங்கன்', ஜெமினி கணேசன், சுஜாதா, ஸ்ரீப்ரியா, முத்துராமன் நடித்த 'ஸ்ரீ காஞ்சி காமாட்சி', சிவகுமார், லதா நடித்த 'கண்ணாமூச்சி', சிவாஜி கணேசன் நடித்த 'பைலட் பிரேம்நாத்', ஜெய்சங்கர் நடித்த 'வண்டிக்காரன் மகன்', நாகேஷ் நடித்த 'அதிர்ஷ்டக்காரன்', என 11 படங்கள் ஓரிரு நாள் முன்னும், பின்னுமாக வெளிவந்தன. 'மனிதரில் இத்தனை நிறங்களா, தப்புத் தாளங்கள்' ஆகிய படங்களில் கமல்ஹாசன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இத்தனை படங்களில் வசூல் ரீதியாக வெற்றி பெற்று ரஜினியையும், கமலையும் தனி கதாநாயகனாக அந்தஸ்துக்கு 'தாய் மீது சத்தியம், சிகப்பு ரோஜாக்கள்' ஆகிய படங்கள் அமைந்தன. சிவாஜி கணேசன், ஜெய் சங்கர் இருவரும் அப்போது முன்னணி ஹீரோக்கள். அவர்களது படங்களை விடவும் ரஜினி, கமல் இருவரும் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்கள். இருப்பினும் ரஜினி நடித்த 'தப்புத் தாளங்கள்', ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்த 'அவள் அப்படித்தான்' படங்களுக்கு பாராட்டுக்கள் கிடைத்த அளவிற்கு வசூல் கிடைக்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக தீபாவளிக்கு ஓரிரு படங்கள் மட்டுமே வெளிவருவதையும், 45 வருடங்களுக்கு முன்பு 11 படங்கள் வந்ததையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் சினிமா எவ்வளவு மாறிவிட்டது என்பது ரசிகர்களுக்குப் புரியும்.