ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை |

சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் முன்பு கிசுகிசுக்கப்பட்ட நடிகர் சித்தார்த், அதையடுத்து தெலுங்கில் வெளியான மகா சமுத்திரம் என்ற படத்தில் அதிதிராவுடன் இணைந்து நடித்தபிறகு அவருடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அவர்கள் இருவரும் டேட்டிங் செல்லும் புகைப்படங்களும் அவ்வபோது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று அதிதி ராவ் தனது 37வது பிறந்த நாளை கொண்டாடியதை அடுத்து, அவரை வாழ்த்தி ஆங்கிலத்தில் கவிதை வெளியிட்டு கவிதை மழையில் அவரை நனைய விட்டுள்ளார் சித்தார்த். அதோடு, ஹேப்பி பர்த்டே பார்ட்னர் என்றும் அவர் ஒரு கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த கவிதையைப் பார்த்து உங்களுக்குள் இவ்வளவு கவிதை எழுதும் திறமை இருக்கிறதா என்று தனது வியப்பை வெளிப்படுத்தி உள்ளார் அதிதி ராவ். மேலும், 2009ம் ஆண்டு சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்ட அதிதிராவ், 2013ம் ஆண்டில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.