ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரிங்கா மோகன். தொடர்ந்து சூர்யா ஜோடியாக 'எதற்கும் துணிந்தவன்,', சிவகார்த்திகேயன் ஜோடியாக 'டான்', தனுஷ் ஜோடியாக 'கேப்டன் மில்லர்', ரவி மோகன் ஜோடியாக 'பிரதர்' ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக நடித்த இரண்டு படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தது.
அதற்கடுத்து தனுஷ் இயக்கத்தில் வந்த 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் 'கோல்டன் ஸ்பாரோ' பாடலுக்கு மட்டும் நடனமாடினார். அடுத்து பவன் கல்யாண் நடிக்கும் 'ஓஜி' தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிரியங்கா, அடுத்து வளர்ந்து வரும் நடிகரான கவின் ஜோடியாக நடிக்க உள்ளது திரையலகிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வளவு எளிதில் யாரும் இப்படி இறங்கி வந்து நடித்துவிட மாட்டார்கள். கதையும், கதாபாத்திரமும் பிரியங்காவை அந்த அளவிற்குக் கவர்ந்திருக்கலாம், அதனால் நடிக்க சம்மதித்திருப்பார் என்றுதான் பேசிக் கொள்கிறார்கள்.