ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அஜித், திரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. படத்தை மிகவும் ஸ்டைலிஷாக எடுத்திருந்தார் இயக்குனர் ஆதிக் என அஜித் ரசிகர்கள் பாராட்டினார்கள். படத்தின் வெற்றிக்கு ஜிவி பிரகாஷ் பின்னணி இசையும் ஒரு காரணமாக அமைந்தது. பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் பின்னணி இசை பலமாக அமைந்தது.
அப்படத்தின் 'ஓஎஸ்டி (ஒரிஜனல் சவுண்ட் டிராக்)' யை விரைவில் வெளியிட உள்ளதாகவும், அதற்கான மிக்சிங் வேலைகள் நடந்து வருவதாகவும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார். ஆதிக் அடுத்து இயக்கும் அஜித் படத்திற்கும் ஜிவி தான் கண்டிப்பாக இசையமைப்பார். அந்த அளவிற்கு இருவருக்குமான நட்பு உள்ளது. 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. அடுத்த அஜித் பட அப்டேட் இன்னும் வரவில்லை என்ற குறையை 'குட் பேட் அக்லி' ஓஎஸ்டி-யை வைத்து ஜிவி ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.