காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
ரஜினியின் ஜெயிலர் படத்தை அடுத்து தனுஷ் அல்லது அல்லு அர்ஜுன் நடிக்கும் படங்களை நெல்சன் இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது கோலமாவு கோகிலா படத்தை அடுத்து மீண்டும் நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து ஒரு பான் இந்தியா படத்தை நெல்சன் இயக்கயிருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போது நயன்தாரா அன்னபூரணி, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, கமல் 234வது படம் என பல படங்களில் நடித்து வரும் நிலையில், கோலமாவு கோகிலாவுக்கு பிறகு தான் கதையின் நாயகியாக நடித்த படங்கள் ஹிட்டாக அமையாததால், மீண்டும் நெல்சனுடன் இணைந்து ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்று நயன்தாராவும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்து வரும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், நயன்தாராவை வைத்து தான் இயக்கும் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் நெல்சன்.