'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் மீரா 16, மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரதே பரிசோதனைக்கு பின் அவரது உடல் அஞ்சலிக்காக விஜய் ஆண்டனி வீட்டில் வைக்கப்பட்டது. திரையுலகினர் பலரும் மீராவிற்கு அஞ்சலி செலுத்தினர். விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறினர்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக படைப்பாளியாக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவருக்கு பாத்திமா என்ற மனைவியும், மீரா, லாரா என்ற இரு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் மீரா, சென்னை சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் சற்று மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு தனது அறையில் தூங்க சென்றவர், அதிகாலை 3 மணி அளவில் துப்பட்டாவால் பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
அவரை வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவேரி மருத்துவமனையில் இருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மீராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
மகளின் இந்த தற்கொலை சம்பவம் விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஓராண்டாகவே மன அழுத்த பிரச்னையால் மீரா அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக மருத்துவ சிகிச்சையும் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
திரையுலகினர் அஞ்சலி
பிரதே பரிசோதனைக்கு பின் மீராவின் உடல் சென்னையில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. விஜய் அம்மா ஷோபா சந்திர சேகர், குஷ்பு, சதீஷ், எடிட்டர் மோகன், மோகன் ராஜா, அமைச்சர் உதயநிதி, இசையமைப்பாளர் யுவன், பாரதிராஜா, அலிஷா அப்துல்லா, ரித்திகா சிங், மன்சூரலிகான், நடிகை சுதா, லலித், டி சிவா, தனஞ்செயன், கிருத்திகா உதயநிதி, சிம்பு, பார்த்திபன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் நேரில் மீரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். விஜய் ஆண்டனி அவரது மனைவிக்கு ஆறுதல் கூறினர்.
திரையுலகினர் இரங்கல்
விஜய் ஆண்டனியின் மகள் மீரா மறைவுக்கு கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ், வெங்கட்பிரபு, ஹரிஷ் கல்யாண், நந்திதா, ராதிகா, சரத்குமார், ராகவா லாரன்ஸ், ஜெயம் ரவி, குஷ்பு, அருண் விஜய், கவின், ஜீவா, அனிருத், கிருஷ்ணா, அதுல்யா, இந்துஜா, சிம்பு, விஷால் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தும், விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறியும் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.