Advertisement

சிறப்புச்செய்திகள்

கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்த போர் முடியவே முடியாது : சீமானை எச்சரிக்கும் விஜயலட்சுமி

18 செப், 2023 - 18:06 IST
எழுத்தின் அளவு:
This-war-will-never-end:-Vijayalakshmi-warns-Seaman

நடிகை விஜயலட்சுமி, தன்னை சீமான் மதுரை கோயிலில் வைத்து திருமணம் செய்ததாகவும், பலமுறை கருத்தரித்து, அதை சீமான் கலைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டி புகாா் அளித்தாா். அதன் பேரில், சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் இரண்டு முறை சம்மன் அனுப்பினா். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இதற்கிடையே, கடந்த செப்.,15ம் தேதி சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார்.

சீமான் ஆஜர்
இந்நிலையில், போலீசாரின் சம்மனை ஏற்று வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக சீமான் இன்று(செப்., 18) ஆஜரானார். அவரது மனைவி கயல்விழி, வழக்கறிஞர்கள் உள்பட 5 பேர் மட்டுமே போலீஸ் ஸ்டேஷன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சீமானுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கூடியுள்ள நிலையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

வன்கொடுமை
போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரான பின்னர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2 பெண்களால் நான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது. வழக்கறிஞர் என்ற முறையில் என் மனைவி என்னுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நான் போலீசாருக்கு விளக்கம் அளித்துள்ளேன்.

13 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கால் எனக்கு தான் வன்கொடுமை நடந்துள்ளது. பெண் வன்கொடுமையை பேசுகிறவர்கள், ஆண்களுக்கு நிகழும் வன்கொடுமையையும் பேசுங்கள். இந்த பிரச்னையில் என் மனைவி கயல்விழி எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்த வீரலட்சுமி மன்னிப்பு கேட்க வேண்டும். விஜயலட்சுமிக்கு 8 முறை கருக்கலைப்பு செய்தேன் என்பது மிகப்பெரும் நகைச்சுவை என்றார்.

போர் தொடரும்
பெங்களூரு சென்ற விஜயலட்சுமி சீமானின் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‛‛சாட்டை துரை முருகன் தான் பாலசுப்ரமணியம் என்ற வக்கீல் ஒருவரை ஏற்பாடு செய்து என்னை வெளியில் மீட்க வைத்தார். என் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் பணம் போட்டு என்னை பெங்களூருக்கு அனுப்பி வைத்தார். மேலும் புகாரையும் உடனே வாபஸ் பெற செய்தார். சீமான் இன்று ஒன்றுமே நடக்காதது போல் பேசி வருகிறார். சாட்டை துரைமுருகனின் கால் லிஸ்ட்டை எடுத்தால் உண்மை தெரிய வரும்.

நீங்கள் மான நஷ்ட வழக்கு போடுங்கள். நான் எல்லா ஆதாரங்களையும் கொண்டு வந்து காண்பிக்கிறேன். என்னை ஓட வைப்பேன் என்கிறார். அப்படி என்றால் அச்சுறுத்துகிறாரா. போலீஸ் இதுபற்றி ஒன்றுமே கேட்கவில்லை. மதுரைக்கு நான் ஏன் ஐந்து முறை அழைத்து செல்லப்பட்டேன். இதுபற்றி போலீசார் விசாரிக்கவில்லை. சாட்டை துரை முருகன் தான் எங்களை பெங்களூருவிற்கு அனுப்பி வைத்தார். இதற்கு சீமான் என்ன சொல்ல போகிறார். என்னை ஏதோ பொய் சொல்லும் பெண் போன்று சீமான் சித்தரிக்க பார்த்தால் நிச்சயம் இந்த போர் முடியவே முடியாது என்பதை உறுதிப்பட கூறுகிறேன்.

இவ்வாறு விஜயலட்சுமி கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் ஒரு ‛கான்ஜூரிங்' உருவாகிறதுதமிழில் ஒரு ‛கான்ஜூரிங்' ... இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

?????????? - thanks ,அருபா
19 செப், 2023 - 22:21 Report Abuse
?????????? கண்ணகி பிறந்த மண்ணில் ஏன் பெண்களுக்கு இந்த நிலை? முதலாவதாக, திரைப்படத்துறையை செம்மைப்படுத்த வேண்டும். தாம்பத்திய உறவில் கணவனும் மனைவியும் ஈடுபடும் போது, மனைவி "நிறுத்து" என்றதும் உடனே கணவன் நிறுத்த வேண்டும். நிறுத்தாவிட்டால் தொடரும் செயல் கற்பழிப்பாகும். நாம் இப்போது இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்கிறோம் என்பதை மறந்துவிடுகிறோம். "ஆசை காட்டடி மோசம் செய்தல்" என்றால் என்ன?
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
19 செப், 2023 - 13:22 Report Abuse
Sridhar இந்த பெண்ணின் பரிதாப நிலை புரிந்துகொள்ளமுடிகிறது. பின்புலம் எதுவும் இல்லாமல், ஒரு அரசியல்வாதியை எதிர்த்து நிற்பது மிகவும் கடினமான விஷயம். இவ்வளவு தவறுகள் செய்தும் மேற்கொண்டு அசிங்க அசிங்கமாய் பேசிக்கொண்டு திரியும் ஒருவனை தலைவன் என தலைமேல் வைத்து ஆட ஒரு கூட்டம் இருப்பது வேதனைக்குரியது. உடனே சட்டம் அதன் கடமையை செய்து இவனை கைது செய்து தண்டனை வழங்கவேண்டும்.
Rate this:
raja - Cotonou,பெனின்
19 செப், 2023 - 08:47 Report Abuse
raja இதை ஏன் இன்னும் மகளிர் ஆணையமும் தானாக வந்து விசாரணை நடத்தும் அமைப்புகளும் கண்டுகொள்ள வில்லை...
Rate this:
19 செப், 2023 - 08:21 Report Abuse
அப்புசாமி மதுரைக் கோவிலில் விசாரிக்க முடியாதா? அங்கே ரெகார்டு இல்லாம கலியாணம் பண்ணிக்க முடியுமா? நாலு படம் எடுத்து வெச்சிருக்கலாமே தாயி.. கேக்கவே ஜாலியா இருக்கே...
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19 செப், 2023 - 05:26 Report Abuse
Kasimani Baskaran வாழ்க்கையே நடிப்பு என்று வாழும் இது போன்ற கப்பிப்பயல்களை பெண்கள் அறிந்து ஒதுங்கிக்கொள்வதே நல்ல நெறி. சைமன் செபஸ்டியான் இந்துவாக வேசம் போட வேண்டிய அவசியம் என்ன வந்தது.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in