வாய்ப்பு தேடும் பிரியா ஆனந்த் | கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் படம் | முதன்முறையாக இமான் இசையில் பின்னணி பாடிய மனோ | பாகுபலி 3ம் பாகம் உருவாகும் : உறுதிப்படுத்திய ராஜமவுலி | மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் |
ஹாலிவுட்டில் மிரட்டிய பேய் படம் ‛கான்ஜூரிங்'. தற்போது தமிழில் ‛கான்ஜூரிங் கண்ணப்பன்' என்ற படம் தயாராகிறது. அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் இந்த படத்தில் சதீஷ், ரெஜினா முதன்மை வேடத்தில் நடிக்க, நாசர், சரண்யா, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
'கான்ஜூரிங் கண்ணப்பன்' பற்றி பேசிய இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர், "ரசிகர்களுக்கு வித்தியாசமான புதுவித அனுபவத்தை கொடுப்பதோடு நல்ல பொழுதுப்போக்காகவும் இப்படம் இருக்கும். முக்கியமாக குழந்தைகள் பார்த்து ரசிக்கும் வகையிலும் நகைச்சுவை, திகில், பேன்டசி கலந்த படமாக இதை உருவாக்கியுள்ளோம். இப்படம் அனைத்து வயதினரையும் நிச்சயம் கவரும்," என்று கூறினார்.